Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் மின்கட்டணம்….. EPS கண்டனம்….!!!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும்,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஏழை எளிய நடுத்தர மக்களின் நாளங்களை அறுத்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் மின்கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |