முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது “மக்கள் நமது மதச்சார்பற்ற ஜனநாயக கட்சி அமைப்பின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் நமக்கு ஆதரவை தந்து தேர்ந்தெடுத்தனர். மேலும் நாம் ஆட்சிக்கு வந்த பின் உள்ளாட்சித் தேர்தலில் நாம் வெற்றி அடைந்ததற்கு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையே காரணம் ஆகும்.
முதல்வரிடம் கோரிக்கை வைத்தால் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. ஆகவே நிச்சயம் கலைஞர் சாதித்த வழியில் நானும் சாதிப்பேன் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கிடையில் சிக்கலில் இருந்து தப்பிக்கவே தான் டெல்லி சென்று உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். ஆனால் தமிழகத்தின் உரிமையை காப்பதற்காவே நான் டெல்லிக்கு சென்றேன். எனவே நான் சாதாரண ஸ்டாலின் இல்லை. தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று முதல்வர் பேசினார்.