திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் எஸ்.காந்திராஜன் திண்டுக்கல் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கிராமங்கள், பேரூராட்சிகள் என அனைத்து இடங்களுக்கும் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் கோட்டாநத்தம் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை மாலை அணிவித்தும், மலர் தூவியும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வரவேற்றனர்.
அப்போது அவர் பேசுகையில், தமிழக மக்கள் சமையல் கியாஸ், பெட்ரோல்-டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் மக்கள் நல்லாட்சியை நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானால் மட்டுமே தமிழகத்தில் மக்களுக்கான நல்ல ஆட்சி அமையும். இதற்கு மக்கள் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.