தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்.19) அன்று 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என்று மொத்தம் 12,838 பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலின்போது பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படவில்லை. இதனால் தேர்தலுக்கு பிறகு கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு மாற்று கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் மக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக செல்வதை காண முடிகிறது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றிலிருந்து உருமாற்றம் அடைந்த பிஏ 2 வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது எனவும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடியது எனவும் ஜப்பான் நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புதிய வைரஸ் இந்தியாவில் பரவ ஆரம்பித்தால் மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கொரோனா மூன்றாம் அலையின் போது விதிக்கப்பட்டது போன்று இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் நேர கட்டுபாடு ஆகியவை விதிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கட்டுப்பாடுகள் இது பிஏ 2 வைரஸ் தொற்றின் தீவிரத்தை பொறுத்தே அமையும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.