Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. வீடு, சொத்துவரி அதிரடி உயர்வு…. தமிழக அரசு ஆணை….!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் இருபத்தி ஒரு சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு 50% சொத்துவரி உயர்கிறது.

600 முதல் 1800 சதுர அடி பரப்புள்ள கட்டடங்களுக்கு 75% சொத்துவரி உயர்த்தப்படுகிறது. 1800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு 100 சதவீதம். 1801 சதுர அடிக்கு மேலுள்ள கட்டடங்களுக்கு 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.இதனைத் தொடர்ந்து மின் கட்டண உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |