தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் வாடகை கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதன் எதிரொலியாக சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 15 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் தற்போது 80 ரூபாய்க்கும், 7 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனையானது 30 முதல் 50 ரூபாய் வரையும், 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனையான அவரைக்காய் தற்போது 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.