சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர் உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஒரு கிலோ சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 70 ரூபாய் அதிகரித்து 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதனைப் போலவே ஒரு கிலோ பாமாயில் 110 ரூபாயிலிருந்து 152 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் 140 ரூபாயிலிருந்து 182 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ நல்லெண்ணெய் 240 ரூபாயிலிருந்து 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ டால்டா 120 ரூபாயில் இருந்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சமையல் எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.