தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை கொரோனா இல்லாத மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்புகளை குறைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து தான் வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
அதன்படி தமிழகத்தில் அரியலூர்,பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை கொரோனா இல்லாத மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாகவும், தொடர்ந்து அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் தமிழகம் விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாகும் எனவும் தெரிவித்துள்ளது