Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு இனிக்காத பொங்கல்…. முதல்வர் ஸ்டாலினுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி?…. மக்களின் முடிவு என்ன….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 100 ரூபாய் ரொக்கம் பணம் என ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி ஆட்சி காலத்தில் 2500 ரூபாய் என்று பழக்கமானது. பொங்கல் பண்டிகை என்றால் தங்களுக்கு எவ்வளவு பணம் அரசு வழங்கும் என்று ரேஷன் அட்டைதாரர்கள் கேட்கும் அளவுக்கு இந்த பழக்கம் அவர்களின் ஆழ்மனதில் பதிந்து விட்டது. அதன்படி இம்முறையும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அரசு ரொக்கப் பணம் வழங்கும் என்று மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர்.

இதனிடையில் பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பாக நிச்சயமற்ற தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக 21 பொருட்கள் மட்டுமே வழங்கப்புடும் என்றும், ரொக்கப் பணம் எதுவும் அளிக்கப்படாது எனவும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது சில இடங்களில் புளியில் பல்லி விழுந்து கிடந்தது, பரிசுத் தொகுப்பில் இருந்த வெல்லம் உருகியது என சரச்சைகள் எழுந்தன. இதற்கு மத்தியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது.

இருப்பினும் பொங்கல் பரிசுத் தொகுப்பால் திமுக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு கடந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கியது. அதனால் மக்கள் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாட முடிந்தது. ஆனால் இந்த முறை ஸ்டாலின் தலைமையிலா திமுக அரசு பரிசுத தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்காததால், இம்முறை பொங்கல் பண்டிகை அவ்வளவாக இனிக்கவில்லை என்பது மக்களின் பெரும் குறையாக இருக்கிறது. கொரோனா உச்சத்தில் இருந்த கடும் காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்றதும் தேர்தலின்போது வாக்குறுதி அளித்ததை போன்று , கொரோனா நிவாரண நிிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 தவணைகளாக 4000 ரூபாய் வழங்கினார்.

கொரோனா நிவாரணம் 4000 ரூபாய் அளித்த 6 மாதங்களுக்குள் மீண்டும் தற்போது பொங்கல் பண்டிகைக்கு எப்படி ரொக்கப் பணம் தர முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கொரோனா  3-வது அலை உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் எப்படி ரொக்க பணம் கொடுக்க முடியும் என்று கேட்கப்பட்டாலும், அதெல்லாம் பொதுமக்கள் மத்தியில் எடுப்படுவதாக தெரியவில்லை. கடந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு எடப்பாடி பழனிசாமி 2500 ரூ கொடுத்தாரே…? ஸ்டாலினால் ஏன் அதை கொடுக்க முடியவில்லை…? என்பதுதான் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்களின் கேள்வியாக இருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் மீதான அவர்களின் இந்த அதிருப்தி விரைவில் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு இருப்பதாக திமுக உடன்பிறப்புகள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

Categories

Tech |