தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் சிலிண்டர் வினியோகம் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 1000 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் கடைகளில் அரிசி வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும் என நுகர்வோரை பயமுறுத்தக் கூடாது .
அரிசி வாங்காவிட்டாலும் ரேஷன் கார்டு இருக்கும்.இதன் மூலமாக உண்மையாகவே அரிசி தேவைப்படுபவர்கள் மட்டும் வாங்க முடியும். கூட்டுறவு நகைக்கடனுக்கான வட்டி குறைக்கப்படும் என கூட்டுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வட்டி குறைக்கப்படும் என கூட்டுறவுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.