தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் வழக்கத்தை விட 80% கூடுதலாக மழை பெய்து உள்ளதாகவும், சென்னையில் வழக்கத்தை விட 83% அதிகம் என்றும், புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது, வரும் நாட்களில் மழையின் அளவு குறையும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும் மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை-காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதேபோல நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஏனைய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை நாளை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும்.
தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பு அளவு 35 சென்டிமீட்டர் ஆனால் 63 சென்டிமீட்டர் மழைப்பொழிவு கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 80% அதேபோல் 60 சென்டிமீட்டர் கிடைக்க வேண்டிய இடத்தில் 113 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாகவும், இது வழக்கத்தைவிட 83% அதிகம் என்றும் கூறியுள்ளார்.