Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு… கமல்ஹாசனின் அன்பு கோரிக்கை..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனால் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென்று கமல்ஹாசன் அன்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களது தொகுதி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இன்று திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அக்கட்சியின் தொகுதி வேட்பாளர்களை அறிவித்தார். தேர்தல் வேலைகளில் நாம் கொரோனா பாதிப்பு என்ற ஒன்றை மறந்து விட்டோம்.

தற்போது கொரோனா  தீவிரமாக அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழகத்தில் கடந்த 16 நாட்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளது. தேர்தல் ஆரவாரங்களில் அமுங்கி விடக்கூடாத அபாய எச்சரிக்கை இது. இந்த வேகத்தில் நோய் பரவுவது பேராபத்து. சகல முன்னெச்சரிக்கை களையும் கடைபிடிக்குமாறு ஒவ்வொரு தமிழரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மக்கள் நீதி மன்ற கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Categories

Tech |