தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று புதிதாக 480 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,48,568-ஆகவும், 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,002-ஆகவும் உள்ளது.
அதேபோல் 1,464 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,03,402-ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 7,164 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.