Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….. கடந்த 2 நாட்களாக…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

கொரோனா இறப்பு விகிதமானது கடந்த இரண்டு நாட்களாக பதிவாகவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது, கடந்த இரண்டு நாட்களாக கொரோனா  குறித்த இறப்பு விகிதம் எதுவும் பதிவாகவில்லை என்பது பெரும் மன நிம்மதியைத் தருவதாக கூறியுள்ளார். மேலும் அவற்றின் பாதிப்பும் படிப்படியாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பேர், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயன் அடைந்து உள்ளனர். மேலும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |