Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குஷியான அறிவிப்பு!…. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையடுத்து கூட்டுறவு சங்க நகை கடன்களை ஆய்வு மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி 48,84,726 நகைக்கடன் விபரங்கள் அனைத்தும் கணினி மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை திரும்ப பெறலாம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல், நத்தம் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பால், கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்கள் தற்போது பயங்கர குஷியில் உள்ளனர்.

Categories

Tech |