Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் தீபாவளி பரிசு…. உங்க பொருள் உங்க கையில்…. அரசு அசத்தலான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நகை கடன் தள்ளுபடி கான அரசாஓணை எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களில் 40 கிராமுக்கு குறைவாக அடகு வைத்தவர்களுக்கான தள்ளுபடி குறித்த அரசாணை தயாராக உள்ளது. இந்த வாரம் வெளிவந்து விடும். அதைத்தொடர்ந்து நகை உரிமையாளர்களிடம் அதைக் கொடுப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசாக தங்களது நகைகள் திரும்ப கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |