தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டம் சார்ந்த உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை மின்கட்டண உயர்வு மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சாலை நிறுவனங்கள் சார்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணையில்,உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டியது உயர்நீதிமன்றத்தின் கடமை, சட்டம் சார்ந்த உறுப்பினர் காலியிடம் நிரப்பப்படாததற்கு நீதிமன்றம் வேதனையை வெளிப்படுத்துகிறது.
மின்சார ஆணையத்தில் சட்ட உறுப்பினர் இருப்பது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அதை நியமிக்காமல் இருப்பதை மாநில அரசு நியாயப்படுத்த முடியாது.எனவே சட்டம் சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படும் வரை கட்டணம் அணுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க ஆணையத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.