தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,517 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 567 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 8,55,121 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 251பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,36,978 ஆக எகிறியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 521 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், தற்போது வரை 8,38,606 கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 3,997 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.