Categories
அரசியல்

தமிழக மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தி – கலக்கிய எடப்பாடி சர்க்கார் ..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்கொரோனாவில் இருந்து 7010 குணமடைந்து இருக்கின்றார்கள். இதன் மூலம் குணமடைந்து எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது. இன்று  கொரோனா பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டாவது முறையாக தமிழகத்தில் குணமடைந்து எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதற்கு முன்பாக இன்றைய எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் குணமடைந்தனர். கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி 7 ஆயிரத்து 758 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக 7 ஆயிரம் பேர் குணமடைந்து இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதே நிலை நீடிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories

Tech |