தமிழகத்தில் வாக்குச் சாவடிகளுக்கு சென்று மக்கள் மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச சவாரி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, இல்லத்திலிருந்து வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச சவாரி சேவையை ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கான பயண கட்டணம் 100 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஊபர் செயலி வழியாக இலவச சவாரி முன்பதிவு செய்து, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றலாம்.