தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 5,104-ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 4,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 4,516 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர். 20,237 பேர் குணமடைந்துள்ளனர். 1,15,898 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,20,505-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 32,92,559 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,809 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 792 பேரும், கோவையில் 778 பேரும், செங்கல்பட்டில் 398 பேரும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.