தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி சுகாதார துறை வெயிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 32,003 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் 71 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,25,275 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 34,14,075 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தற்போது 475 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தற்போது புதிதாக 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.