Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு புதிய ரேஷன் அட்டை…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில் உள்ள பெட்டகத்தை ஆய்வு செய்தபோது 2.5 கோடி ரூபாய் அளவிற்கு போலி நகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்துள்ளோம்.

முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கூட்டுறவு பயிற்சி நிலையங்கள் அனைத்து ஊர்களிலும் தற்போது உள்ளது. தற்போது எந்த பயிற்சி நிலையங்களையும் இடமாற்றம் செய்யவில்லை. புதிய ரேஷன் அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், புதிய ரேஷன் அட்டை அனைவருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்குவதற்கு உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு 3 நாள் முன்னதாகவே ரேஷன் கடைகளில் உரிய நேரத்தில் பொருட்கள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைவிட தமிழக அரசு எப்படி சிறப்பாக செயல்படுகிறது என்பது பற்றி தெரிந்து கொள்ள தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |