Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு…. ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரேஷன் கடைகளில் ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ரொக்கப் பணம் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பரிசு தொகுப்பு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புகளை ஏற்றிச் செல்வதற்காக வந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் சுமை தூக்குவோர் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு கூடுதல் கூலி கேட்டுள்ளனர். அதனை ஒப்பந்தம் எடுத்தவர்கள் தர மறுத்ததால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொருட்களை ஏற்று மறுத்து விட்டனர். இதனால் காரைக்குடி தாலுகா ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு பொருள் அனுப்புவதில். சிக்கல் ஏற்பட்டது இதையடுத்து அதிகாரிகள் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |