இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
மேலும் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய ஆய்வில், குழந்தைகள் நல்வாழ்வு குறியீட்டில் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட காரணம் மக்களின் ஒத்துழைப்பு தான்.