தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் முதல்வர் முக ஸ்டாலின், பல மெகா திட்டங்களை அரங்கேற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களிலும், 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 1,207 இடங்களிலும், 74 ஊராட்சித் துறையின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களிலும், அனைத்து ஒன்றியங்களிலும், திமுகவின் அனைத்து வகையான கூட்டணியை கைப்பற்றி வரலாற்று அளவில் சாதனை படைத்துள்ளது.
அதனால் முதல்வர் முக. ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். 5 வருடங்களில் அடையக்கூடிய நம்பிக்கை 5 மாதத்திலும், 5 வருடங்களில் செய்ய வேண்டிய சாதனைகளை 5 மாதங்களில் செய்ததால் கிடைத்த வெற்றி இது என்று முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலுக்காக உழைத்த தேர்தல் பொறுப்பாளர்களுக்கு, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் முதல்வர் முக. ஸ்டாலின் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்க சம்மதம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. தேர்தலில் வரலாற்று வெற்றியை வாரி வழங்கிய தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு நிச்சயம் வழங்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். அதுவும் ரொக்கமாக தமிழக மக்களின் கைகளில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.