தமிழகத்தில் இன்று புதிதாக 2886 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 4024 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தினமும் 6000 வரை தினமும் வரை பதிவாகி இருந்த கொரோனா தொற்று இன்றைய நிலையில் தற்போது 3 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இதே நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அப்படியே கொரோனா இல்லா தமிழகமாக மாற வேண்டும் என தமிழக மக்கள் ஒவ்வொருவரும் எதிர்நோக்கியுள்ளனர்.