கண்ணுக்கே தெரியாத கொரோனா பெற்றுந்தொற்றால் உலக நாடுகள் முழுவதும் முடங்கி இருக்கின்றது. நாடுகளின் பொருளாதாரம் சிதைந்து இருக்கும், நிலையில் ஒவ்வொரு நாடும் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இதே நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் தமிழக அரசாங்கம் இது தொடர்பான பல்வேறு விதமான முன் மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏனைய மாநிலங்களுக்கு வழிகாட்டுகின்றது.
தமிழக தலைமை தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பிற நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்படுகின்றது. இதன் பலனாக பல்வேறு முதலீடுகள் தமிழகத்துக்கு ஈர்க்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று தமிழகத்தில் முதலீடு செய்யும் 16 நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
தமிழக அரசின் ரூபாய் 15 ஆயிரத்து 137 கோடி முதலீட்டினால் மாநிலத்தில் 6555 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வேலை வாய்ப்பு குறைந்த நிலையில் இந்த வாய்ப்பு நன்மை தரும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஒட்டு மொத்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.