தமிழகத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரண தொகை அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்குவதை உறுதி செய்து, பயிர் காப்பீட்டுத் தொகையும் தாமதமின்றி கிடைப்பதற்கு முதல்வர் பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.