Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு விடிவிளக்கு… மகிழ்ச்சி தரும் செய்தி… உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் குடிக்கு அடிமையான ஆண்களால் பெண்கள் மற்றும் குழந்தைகளும் பல்வேறு கொடுமைகளையும் இழப்புகளையும் சந்தித்து வருகிறார்கள். அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே அவர்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தினால் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் ஆறு ஓடுகிறதோ இல்லையோ மூலை முடுக்கெல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது என வேதனை தெரிவித்துள்ளது.

Categories

Tech |