தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,27,356 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், 9,916 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 33,97,238-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் இன்று 21,435 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.