தமிழகத்தில் கொரோனா 2 வது அலை இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகவில்லை. பண்டிகை காலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. தமிழகத்தில் தற்போது பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
இருந்தாலும் பனி, மழை மற்றும் பண்டிகை காலம் ஆகியவற்றில் கொரோனாவை கையாளுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். அரசு சார்பாக நடத்தப்பட்ட தடுப்பூசி பரிசோதனையில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் வரவில்லை” என்ற அவர் கூறியுள்ளார்.