தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும். அதன் பிறகு வருகிற 8-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கனமழையும் பெய்யும்.
இதனையடுத்து வருகிற 9-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும். இதைத்தொடர்ந்து வருகிற 10-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, நாமக்கல், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும்.
வருகிற 11-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழையும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் இன்று முதல் வருகிற 11-ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.