Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலட்சியமா இருக்காதீங்க!…. 1.13 கோடி பேருக்கு…. சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3-வது அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அந்த வகையில் தினசரி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சுமார் 1.13 கோடி பேர் இன்னும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், “தமிழக மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அலட்சியம் காட்ட வேண்டாம். 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று எச்சரித்துள்ளார். அதேசமயம் தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |