Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. அசுர வேகத்தில் பரவும் கொரோனா…. சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். அறிகுறி இல்லை என்றால் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா பராமரிப்பு மையங்கள் முழுவீச்சில் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |