அதிதீவிர வெப்பநிலையால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் என சூழலியலாளர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 120 ஆண்டுகளில் ஏப்ரல் மாதங்களில் பதிவான வெப்ப நிலையே இந்த ஆண்டு உச்சத்தை எட்டி உள்ளதாக சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிதீவிர வெப்பநிலையால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும் என எச்சரித்துள்ளனர்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 சியஸ் வரை இருக்கும்.