தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே மூன்றாவது அலையில் அதிகமாக உயிரிழப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையில் முதல் தவணை தடுப்பூசி 80 சதவீதம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி 65 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 1,71,616 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று தகுதியானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.