தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தமிழக கரையை நெருங்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால் இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்காலில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் விழுப்புரம், செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, கடலூர், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் தெற்கு வங்ககடல் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.