Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. ஆவணங்கள் ரொம்ப முக்கியம்…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகி தனித்து போட்டியிடுகிறது. அனைத்து கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் முறைகேடுகளை தடுக்க 1650 பறக்கும் படைகளை அமைத்துள்ளது. மாநகராட்சியின் ஒரு மண்டலத்துக்கு ஒன்று, நகராட்சிக்கு மற்றும் பேரூராட்சிக்கு தலா ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள, இந்த பறக்கும் படையில் வருவாய் அலுவலர், இரண்டு அல்லது மூன்று காவலர்கள் மற்றும் வீடியோ பதிவு செய்வோர் இடம் பெறுவர்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள வரை 24 மணி நேரமும் பறக்கும் படைகள் செயல்படும். 8 மணிநேரத்திற்கு ஒருமுறை மாற்றுப் பணி வழங்கப்படும். இதற்காக 1650 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ அல்லது கட்சி தொண்டரோ, பொதுமக்களோ உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் 50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமும், பத்தாயிரத்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |