Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. இதெல்லாம் யாரும் செய்யாதீர்கள்…. கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கன மழையும், சென்னை, நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மரத்தின் அடியில் நிற்க வேண்டாம். ஈரமான கையுடன் மின் சாதனத்தை ஆன் செய்யாதீர்கள். மின்சார வயர் அறுந்து கிடந்தால் அருகில் செல்லாதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |