Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. இன்று முதல் வெயில் வெளுத்து வாங்கும்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று முதல்  வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் வெயில் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

அதன்படி வெப்பநிலை 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மக்கள் வெளியே செல்லும் போது குடை மற்றும் தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகளை எப்போதும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி மோர் போன்ற குளிர் பானங்களை அருந்துவது மிகவும் நல்லது.

Categories

Tech |