Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. 2 நாட்கள்…. வெளியே போகாதீங்க….!!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மேலும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. எனவே வெப்ப நிலை அதிகம் உள்ள நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை சற்று தவிர்ப்பது நல்லது. அப்படி தவிர்க்க முடியாத சூழலில் வெளியில் சென்றால் குடையை கையில் எடுத்து செல்வது நல்லது.

Categories

Tech |