Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. 4-வது அலை பரவுமா?…. சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்….!!!!

கொரோனா 4-வது அலை பரவக் கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் மக்கள் நிலைகுலைந்து போயினர். இந்த கொரோனா காரணமாக தமிழ் நாட்டிலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த கொரோனா தொற்று 2 அலைகள் பரவிய நிலையில் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை பொதுமக்கள் போட்டு கொண்டதன் காரணமாக 3-வது அலையின் பாதிப்பு பெரிய அளவில் குறைந்தது.

இந்நிலையில் கான்பூர் ஐஐடி ஜூன் மாதம் இறுதிக்குள் 4-வது அலை பரவும் என்று கூறியுள்ளது இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கொரோனா 4-வது அலை பரவும் எனவும், அதற்குள் பொதுமக்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் 92 விழுக்காடு பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து 2-வது தவணை தடுப்பூசி 80 விழுக்காடு பேருக்கு போடப்பட்டுள்ளது. இதன்பிறகு கொரோனா 4-வது அலை பரவும் போது மீண்டும் முழு ஊரடங்கு போடப்படும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |