தமிழகத்தில் ஆவின் பால் பாக்கெட் எடை குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்து உள்ளன. நுகர்வோர்களின் நலன் பேணும் வகையில், தரம் மற்றும் அளவுகள், எவ்வித வேறுபாடுமின்றி பால் விநியோகம் செய்வதில் ஆவின் நிறுவனம் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயந்திர தொழில்நுட்பம் காரணமாக ஏதாவது அளவு குறை இருந்தால் உடனடியாக மாற்று பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும். நுகர்வோருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் 24 மணி சேவை கட்டணமில்லா எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பால் பாக்கெட்டின் எடை குறைவாக இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி மக்கள் 1800-4253300 என்ற எண்ணில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.