Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களே…. “இது வெறும் ட்ரெய்லர் தான்” பம்பர் பரிசு காத்திருக்கிறது…. எடப்பாடி பழனிச்சாமி ட்விட்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.

600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு 50% சொத்துவரி உயர்கிறது. 600 முதல் 1800 சதுர அடி பரப்புள்ள கட்டடங்களுக்கு 75% சொத்துவரி உயர்த்தப்படுகிறது. 1800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு 100 சதவீதம். 1801 சதுர அடிக்கு மேலுள்ள கட்டடங்களுக்கு 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.இதனைத் தொடர்ந்து மின் கட்டண உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து தனது கருத்தை எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நகர்ப்புற உள்ளாட்சி யில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு பம்பர் பரிசாக 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி உள்ளது தமிழக அரசு. இது வெறும் ட்ரெய்லர் தான். இனிவரும் காலங்களில் நிறைய பம்பர் பரிசு காத்திருக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |