Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இந்த அறிகுறி இருந்தா?.. உடனே டெஸ்ட் பண்ணுங்க…. சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

காய்ச்சல் சளி உள்ளவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மக்கள் நலவாழ்வு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் ஒமைக்ரானும் சேர்ந்துகொண்டு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது.தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது அவை பின்வருமாறு

காய்ச்சல், சளி, இருமல், மூச்சுதிணறல், உடல்வலி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும் கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு அறிகுறி இல்லை என்றால் பரிசோதனை தேவையில்லை.
தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் பரிசொதனை செய்து கொள்ள வேண்டும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |