Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி இப்படித்தான் மனு அளிக்கனும்…. கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை நேரடியாக வழங்குவதே தவிர்க்க வேண்டும் என்றும் தளர்வுகள் அளிக்கும் வரை தலைமைச் செயலகம் வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சரின் தனிப்பிரிவு தனி அலுவலர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் தனிப்பிரிவில் தினமும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்து மனு அளிக்கின்றனர். தற்போது கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த சூழலில் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வரும்போது அவர்களால் முகக்கவசம், தனிமனித சமூக இடைவெளி போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது இல்லை.

எனவே பொதுமக்கள் மனுக்களை நேரடியாக அளிப்பதை தவிர்த்து தலைமைச் செயலக வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் மட்டுமே மனுக்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மிகவும் அத்தியாவசிய சூழ்நிலையில் மட்டுமே முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களிடமிருந்து தபால், இணையதளம், மின்னஞ்சல் மற்றும் முதலமைச்சர் உதவி மையம் ஆகிய வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. எனவே கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக கூடுவதை தவிர்த்து தபால் மற்றும் இணையவழி சேவைகளைப் பயன்படுத்தி மனுக்களை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |