மிக மோசமான கட்டத்தை தாண்டி விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புதுவையில் இருந்து கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், மிக மோசமான கட்டத்தை நாம் தாண்டி விட்டோம். இனி விட்டுவிட்டு சென்னையில் ஆங்காங்கே லேசான மழை பொழியும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடசென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் கடற்கரையில் காற்று அதிகமாக வீசும். மக்கள் பயப்படாமல் நிம்மதியாக இருங்கள். மிக மோசமான கட்டத்தை நாம் தாண்டி விட்டோம். கரையை கடக்கும் போது காற்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று அவர் தெரிவித்துள்ளார்.