Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி நேரில் வர வேண்டாம்…. அரசு புதிய வசதி அறிமுகம்….!!!!

வில்லங்கச் சான்று விவரங்களை திருத்த இனி நேரில் வர வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் மூலமாக திருத்த புதிய வசதி செய்யப்பட்டுள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1975ஆம் ஆண்டு முதல் வில்லங்கச் சான்றிதழ்கள் அனைத்தும் விரைவு குறியீடு மற்றும் சார் பதிவாளரின் கையொப்பம் இட்டு ஆன்லைன் வழியே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அப்படி வழங்கப்படும் வில்லங்கச் சான்றில் உள்ள விவரத்துக்கும், ஆவணத்தில் உள்ள விவரங்களுக்கும் மாறுபாடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் சென்று உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. அதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வில்லங்கச் சான்றிதழில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வில்லங்கச் சான்றில் உள்ள விவரங்களில் திருத்தங்கள் செய்ய பதிவுத் துறையின் இணையதளத்தில் அட்டவணை தரவு திருத்தம் என்ற முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே பெறப்பட்டு சார்பதிவாளரால் சரி பார்க்கப்பட்டு மாவட்ட பதிவாளரின் ஒப்புதலுடன் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |