மின்தடை செய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
வீடுகளில் ஏதாவது மின்தடை ஏற்பட்டால் அத சரி செய்ய மின்வாரியதிலிருந்து ஒரு பணியாளர் வந்து சரிசெய்து கொடுப்பர். அவருக்கு அரசாங்கம் மாதாமாதம் சம்பளம் கொடுக்கிறது. இருப்பினும் அவர்கள் மின்தடையை சரிசெய்து கொடுத்துவிட்டு பணம் வாங்குவதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடையை சரிசெய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடையை சரிசெய்ய, புதைவடம் (அ ) வேறு பொருட்களை வாங்க பணம் கோரினால் 9445857593, 9445857594 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இல்லையெனில் 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது.